தென் மாவட்டங்களில் காதல்

சமீபத்தில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. தலைப்பு- தென்மாவட்டங்களில் மக்கள் காதல் திருமணங்களை எதிர்ப்பது ஏன்? அதன் முக்கிய அம்சமாக சமூகம் (ஜாதி) விவாதிக்கப்பட்டாலும், என்னுடைய கருத்துப்படி சமூகத்தை விட மானம் தான் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. என்னுடைய பதினெட்டு வருட தென் மாவட்ட வாழ்க்கையில் என்னுடைய அனுபவம் மற்றும் நான் நேரில் கண்ட நிகழ்வுகளை வைத்து இதை எழுதுகிறேன்.

சென்னை போன்ற மாநகரங்களில் காதல் திருமணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. ஆனால் இது கிராமங்களில் சாத்தியமில்லை. இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது குடும்ப அமைப்புகள் தான்.  கிராமங்களில் குடும்ப அமைப்பு பற்றி திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக அனைவரும் அறிந்த ஒன்று தான். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அது சந்தோஷ நிகழ்வாகட்டும் அல்லது துக்க நிகழ்வாகட்டும், அந்த ஊரை சேர்ந்த அனைவரும் பங்கேற்றுக்கொள்வார்கள். அதாவது அந்த ஊரில் நடக்கும் நிகழ்வு அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். நம் நகரங்களில் அது போன்ற நிலைமை இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல முடியும்.

இவ்வாறு இருக்கும்போது, கிராமத்தில் ஒரு பையனோ பெண்ணோ காதலித்து அல்லது ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அதிலும் ஒரு பெண் இதை செய்து விட்டால், பெற்றோர் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. என்னதான் சமாதானமோ காரணங்களோ கூறப்பட்டாலும் அத்தனை வருடங்களாக வளர்த்த பிள்ளை இன்று சொல்பேச்சு கேட்காமல் இப்படி செய்து விட்டதே என்ற கோபமும் அவமானமும் பெற்றோர்களை எவ்வளவு தூரம் கொடுமைபடுத்தும் என்பதை விவரிக்கவே முடியாது. பையன் காதல் திருமணம் செய்துகொண்டால் கூட ஏற்றுகொள்ளும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்றால் ஏற்றுகொள்பவர்கள் மிக மிக குறைவு தான்.

எவ்வளவோ பேர் என்னதான் வாதிட்டாலும், பாசத்திற்கும் மானத்திற்கும் இடையில் பெற்றோர் படும் பாடு, எவரும் அனுபவித்தால் தான் தெரியும். பெற்றோர் ஏன் இவற்றிற்காக பயப்பட வேண்டும் ? தவறான முன்னுதாரணங்கள்(examples) தான் என்பது என் கருத்து.  சிறு வயதில் ஏதோ விவரம் தெரியாமல் இளைஞர்கள் செய்யும் இது போன்ற காரியங்கள் அவர்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனையோ பெண்கள் வாழ முடியாது என்று வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதோ அல்லது ஒரு நல்ல நிகழ்வு நடப்பதோ கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தான் அனைவருக்கும் பயம் ஏற்படுத்துகிறதே தவிர, வேறு எதற்காகவும் பயப்பட தேவையில்லை என்பது என் கருத்து. ஆனால் சமூக சிந்தனை மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி அமைந்தால் தான் ஒரு சில நல்ல காதல் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளபடும். அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.

Posted in Uncategorized | Leave a comment

இந்தியாவின் அவமானங்கள்

இப்போதெல்லாம் மத்திய அரசையும் அதன் மந்திரிகளையும் நினைத்தால் கோபமும் வெறுப்பும் தான் வருகிறது. முக்கியமாக லோக்பால் மசோதா பிரச்சினையில் இவர்களின் நடவடிக்கைகளை பார்த்தால் நாடு என்ன ஆகுமோ என்கிற பயம் தான் அதிகமாகிறது. ஒரு பிரதமர் தன்னை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர சம்மதிக்கிறார். ஆனால் அரசின் அமைச்சர்கள் பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள்.  அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே பெரும் குழப்பமாக இருக்கிறது. சரி ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக இவர்கள் கடுமையான நடவடிக்கையாவது எடுத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  ஆனால் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக போராடும் அன்னா ஹசரேவையும் எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உச்ச நீதி மன்றம் இவர்களை கண்டித்தால் தான் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முக்கிய காரணங்கள் ஊழலும் ஆட்சியில் இருந்தவர்களின் அராஜகமும் தான். இதே நிலை தொடர்ந்தால் மத்திய அரசை ஆளும் கூட்டணி அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வுவது உறுதி.

Posted in Uncategorized | Leave a comment

என் கவிதைகள்-3

அப்துல் கலாமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கோபித்துக் கொள்கிறார்கள்
உன்னைப்பற்றியே அதிகம் சிந்திக்கிறேன் என்று!
ஜோதிகாவும் பிரகாஷ் ராஜும் கோபித்துக் கொள்கிறார்கள்
உன்னையே அதிகம் ரசிக்கிறேன் என்று!
சின்மயியும் ஸ்ரேயா கோஷலும் கோபித்துக் கொள்கிறார்கள்
உன் குரலையே  அதிகம் கேட்கிறேன் என்று!
சுஜாதாவும் டான் ப்ரௌனும் கோபித்துக் கொள்கிறார்கள்
உன்னையே அதிகம் படிக்கிறேன் என்று!
நான் என்னையே கோபித்துக் கொள்கிறேன்
என்னையே மறந்து விட்டேன் என்று!
Posted in Uncategorized | Leave a comment

என் கவிதைகள்-2

காதலைச் சொல்கிறேன்
பிரச்சினை என்கிறாய்
பார்க்கலாம் என்கிறேன்
புரிந்துகொள் என்கிறாய்
வார்த்தையின்றி நிற்கிறேன்
நீயோ அழுகிறாய்
என்னை ஏன் கொல்கிறாய்!
Posted in Uncategorized | Leave a comment

என் கவிதைகள்

அன்று…
நானும் நீயும்
கடற்கரையில் கைகோர்த்து
நடந்து சென்ற நினைவுகள்…

நீ
கடற்கரை மணலில்
கால் தடம் பதித்து
விளையாடிக் கொண்டிருக்க…

நான்
உன் கண்களை
நேரில் பார்க்க துணிவின்றி
பயந்து கொண்டிருந்தேன்…

இறுதியில் கேட்டு விட்டேன்
“நீ தான் என் வாழ்க்கை துணை ,
என்ன சொல்கிறாய்? ” என்று…

இன்று…
அதே கடற்கரையில்
தனியாக நடக்கிறேன்…

காத்திருக்கிறோம்
கடற்கரை உன் கால் தடத்திற்காக…
நான் உன் பதிலுக்காக…

Posted in Uncategorized | Leave a comment

Sky is not the limit

Yes. All in this world, according to me, is about confidence. I am proud to say these as my policies- Think, Learn, Act and Achieve. In every stage of this, just have a confidence. We can feel where we are.

Think- We are humans. The feature that differentiate us from other creatures, as it is told, is the skill of thinking. Why should we be just another creature in this world? We have a life of years. Why should we waste them in normal life? Think. Think to achieve. Have a confidence of thinking. Show that you are not like others.

Learn- When we start thinking, we start to learn. Learn a lot. There are not only things to be learnt, but people also. Learning- the only thing in the world, which has no end. Learn to reach your goal. Have a role model. Learn them. Learn your surroundings. Learn everything. Is it not possible?

Act- What we are going to do by learning? To pass our time? Never. Act to the world that you know this. Be humble here. People are ready to throw you out of everything you want to achieve in the world. Be careful. And moreover, be confident. Are you acting to achieve the goal?

Achieve- There are thinkers. There are learners. There are actors. How many of them are achievers? You can be. Yes. Achievers are praised more than thinkers, learners and actors. You can achieve with your great confidence. Confidence leads you to achieve as it did for me. In any of your situation, just say “Yes, I can”. Feel the confidence.

Posted in Uncategorized | 2 Comments